ECONOMYSELANGOR

மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பு

கிள்ளான், டிச 23: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐ வழங்கும் மடிக்கணினி உதவி, மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஊக்குவிப்பதாக உள்ளது.

18 வயதான மாணவி எம் ஷமிலா, இந்த உதவி தான் கடினமாக படித்து, ஆசிரியராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற உதவும் என்றார். “மேலும், எனக்கு இந்த உதவி கிடைத்து என் பெற்றோரின் சுமையைக் குறைக்க உதவியுள்ளது,“ என்றார்.

மடிக்கணினி ஒப்படைப்பு விழாவை எம்பிஐயின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர் அஹ்மத் அஸ்ரி ஜைனல் நோர் நிறைவு செய்தார். செந்தோசா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN), டாக்டர் ஜி குணராஜாவும் அவ்விழாவில் உடன் இருந்தார்.

மற்றொரு மாணவர், கே.பாலசுப்ரமணியம் (17), தனது படிப்புக்கு உதவியாக இருக்கும் இத்திட்டத்திற்கு த் தான் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு நன்றி தெரிவித்தார். “ஆன்லைன் வகுப்புகளுக்கு கைப்பேசியைப் பயன்படுத்துவது கடினமாக உள்ளது, ஆனால் இந்த மடிக்கணினி உதவியுடன் நான் இன்னும் வகுப்பில் அதிக கவனம் செலுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

 


Pengarang :