ALAM SEKITAR & CUACANATIONAL

ஏழு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861 ஆக குறைந்தது

ஷா ஆலம், டிச 23- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி ஏழு
மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50,861ஆக
குறைந்துள்ளது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 66,197 ஆக இருந்ததாகத்
தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) கூறியது.

திரங்கானுவில் மிக அதிகமாக அதாவது 25,895 பேர் துயர் துடைப்பு
மையங்களில் தங்கியுள்ள வேளையில் அதற்கு அடுத்த நிலையில்
கிளந்தான் (24,690), சரவா (104), சிலாங்கூர் (57), ஜோகூர் மற்றும் பேராக் (46),
பகாங் (23) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

தொடர்ச்சியாக செய்த மழை காரணமாக நாட்டின் பல மாநிலங்களில்
கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. எனினும்
வெள்ளம் தற்போது தணிந்துள்ள நிலையில் பொது மக்கள் தங்கள்
வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட திரங்கானு
மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களுக்கு உடனடிய உதவித் நிதியாக 10
கோடி வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அவ்விரு மாநிலங்களையும் சேர்ந்த
மக்களுக்கு உதவுவதற்காக சிலாங்கூர் அரசு பத்து லட்சம் வெள்ளியை
வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக்
கூறியிருந்தார்.


Pengarang :