ECONOMYSELANGOR

சீனப் புத்தாண்டை முன்னிட்டு 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன

கிள்ளான், டிச 23: அடுத்த ஆண்டு சீனப் புத்தாண்டை முன்னிட்டு செந்தோசா மாநிலச்
சட்ட மன்றத்தில் சீனச் சமூகத்தினருக்கு மொத்தம் 400 ஜொம் ஷாப்பிங் வவுச்சர்கள்
வழங்கப்படுகின்றன.

அடுத்த ஜனவரி மாதம் தொடக்கம் வரை விண்ணப்பம் செந்தோசா மாநிலச் சட்ட
மன்றத்தின் சமூக சேவை மையத்தில் திறந்திருக்கும் என்று பிரதிநிதி டாக்டர் ஜி
குணராஜா தெரிவித்தார்.

82,400 பெறுநர்கள் பயனடையும் இத்திட்டத்திற்குச் சிலாங்கூர் பட்ஜெட் 2023யில்
மொத்தம் RM16.48 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சீனப் புத்தாண்டை
முன்னிட்டு சுமார் 15 சீன வழிப்பாட்டு தளங்களுக்கு உதவுவதற்காகச் செந்தோசா
மாநிலச் சட்டமன்றம் RM30,000 ஒதுக்கீடு செய்ததாகவும் குணராஜா கூறினார்.

அதுமட்டுமில்லாமல், இது போன்ற உதவிகள் அனைத்து பண்டிகைகள் போதும் அவரவர்
வழிப்பாட்டு தளங்களுக்கு வழங்கப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார்.

வழிப்பாட்டு தளங்களில் நடத்தப்படும் நிகழ்வுகளுக்குக் கூடுதல் செலவாகும் தண்ணீர்
மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு இது உதவும்; என்று அவர்
கூறினார்.


Pengarang :