NATIONAL

மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பாதுகாக்க வேண்டி- பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், டிச 25: ஒற்றுமை கலாச்சாரத்தை விதைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் தோள்களில் மட்டும் இல்லை மாறாக ஒவ்வொரு குடிமகனும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை பாதுகாப்பதில் சக்திவாய்ந்த மற்றும் தொடர்ச்சியான பங்கை ஆற்ற வேண்டும் என கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

“பல இனங்கள் மற்றும் பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் நாம் மக்களிடையே அழகான வார்த்தைகளைப் பேசி நட்புறவை வலுப்படுத்துவது நமது வழக்கம் மற்றும் கடமையாகும் என்றார்.

கிறிஸ்தவ சமுதாயத்திற்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் தினம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு முக்கிய நாள், அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதை குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறார்கள், ”என்று அவர் தனது முகநூலில்  தெரிவித்தார்.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக கொண்டாடப் படுவதோடு  மக்களிடையே அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் ஒற்றுமையைக் கொண்டு வரும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

சொந்த ஊர்களுக்குத் திரும்புபவர்கள் சாலையில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

– பெர்னாமா


Pengarang :