SELANGOR

மேருவில் மோசமாகச் சேதமடைந்துள்ளச் சாலையை சீரமைக்கும் பணி இன்று தொடங்கப்படும் – கிள்ளான் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், டிச.27: கிள்ளான் முனிசிபல் கவுன்சில் (எம்.பி.கே), கிள்ளான், மேருவில் உள்ள சுங்கை காபார் இண்டா தொழில்துறை பகுதியில் மோசமாகச் சேதமடைந்துள்ளச் சாலையை சீரமைக்கும் பணியை இன்று தொடங்குகிறது.

மேரு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) முகமட் ஃபக்ருல்ராசி முகமட் மொக்தார் கூறுகையில், பயனர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அளவுக்கு குண்டும் குழியுமாக உள்ளதாக கூறப்படும் அப்பாதையின் நிலைமையை உள்ளாட்சி நிர்வாகம் அறிந்திருந்தது என்றார்.

“முன்னதாக, விரும்பத்தகாத ஏதாவது நடந்து சம்பந்தப்பட்ட தரப்பினரை மக்கள் குற்றம் சாட்டுவார்கள் என்று அஞ்சியதால், வாகனங்கள் செல்லும் பாதை மூடப்பட்டது.

“ஆனால் பலர் சாலை மூடப் பட்டதால் கோபமாக இருக்கிறார்கள், ஏனெனில் அது அவர்களின் பயணத்தை கடினமாக்குகிறது. நான் இன்று அச்சாலை பழுது பார்க்கக் கோரியுள்ளேன்,  என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

சம்பந்தப்பட்ட சாலையில் 1.52 மீட்டர் ஆழத்தில் பள்ளங்கள் உள்ளதாகவும், தண்ணீர் தேங்கும் போது மிகவும் ஆபத்தானதாகவும், இதனால் விபத்து அபாயம் அதிகமாக இருப்பதாகவும் பொதுமக்கள் கூறினர்.

அப்பாதையின் மோசமான நிலையால் தங்கள் வாகனங்கள் சேதமடைந்ததாகக் கூறும் பயனர்களும் உள்ளனர்.


Pengarang :