NATIONAL

தாமான் சாலாக் மாஜுவில்  இளம் பெண் ஒருவரைக் காணவில்லை

சிப்பாங், டிச.27: தாமான் சாலாக்  மாஜுவில் இளம்பெண் ஒருவர் காணாமல் போய்
உள்ளதாகக் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

சல்சபிலா புத்ரி மட் நசீர் (13), காணாமல் போன புகாரை அந்த பெண்ணின் சகோதரர்
முகமட் ஃபித்ரா மட் நசீர் நேற்று காலை 10 மணியளவில் பண்டார் பாரு சாலாக் திங்கி
காவல் நிலையத்தில் அளித்ததாக சிப்பாங் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி
ஆணையர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

“அவரது சகோதரர் அளித்த புகாரின்படி, டிசம்பர் 25 அதிகாலை 2.30 மணியளவில்
சல்சபிலா புத்ரி காணாமல் போனது அறியப்பட்டது.

இந்த வழக்கு இன்னும் காவல்துறையின் விசாரணையில் உள்ளது மற்றும் அப்பெண்
காணாமல் போன நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளது; என்று அவர் இன்று ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.

வான் கமருல் அஸ்ரான் கூறுகையில், ஹோம்ஸ்டே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள்
மூலம், சல்சபிலா புத்ரி கருப்பு உடையில் அறையை விட்டு வெளியேறியதும், ஒரு நபரை
சந்தித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த நபர் சல்சபிலா புத்ரியைக் குடியிருப்பு பகுதிக்கு
வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

புகார்தாரர் தனது சகோதரியையும் பலமுறை தொடர்பு கொண்டார், ஆனால்
முடியவில்லை,  என்று கூறினார்.

Pengarang :