SELANGOR

மீண்டும் பள்ளி திரும்பும் உதவிக்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் அடுத்த ஜனவரி 15 வரை திறந்திருக்கும் – கின்ராரா மாநிலச் சட்டமன்றம்

ஷா ஆலம், டிச 27: கின்ராரா மாநிலச் சட்டமன்றத்திற்கான (டுன்) சிலாங்கூர் மந்திரி
புசார் அல்லது எம்பிஐ வழங்கும் மீண்டும் பள்ளி திரும்பும் உதவிக்கான விண்ணப்பங்கள்
நேற்று முதல் அடுத்த ஜனவரி 15 வரை திறந்திருக்கும்.

இரண்டாம் கட்ட உதவிக்கான விண்ணப்பங்கள் RM4,000 மற்றும் அதற்கும் குறைவான
வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 150 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி
மாணவர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது என்றார் இங் ஸீ ஹான் (Ng Sze Han)

இந்த RM100 ரொக்க உதவியானது பெற்றோரின் சுமையைக் குறைப்பதற்கான மாநில
அரசின் திட்டமாகும். மேலும் இந்த உதவி ஒரு குடும்பத்திற்கு ஒரு மாணவருக்கு மட்டுமே
வழங்கப்படும்.

விண்ணப்பத்திற்குத் தேவையான ஆவணங்கள் மாணவர்களின் அடையாள அட்டை
அல்லது மைகிட் (MyKid), தாய் மற்றும் தந்தையின் அடையாள அட்டையின் நகல் மற்றும்
தாய் மற்றும் தந்தையின் வருமானச் சீட்டின் நகல் ஆகும்& என்று அவர் முகநூலில்
தெரிவித்துள்ளார்.

ஏதேனும் கேள்விகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்குக் கின்ராரா மாநிலச் சட்டமன்றத்தின் சமூக சேவை மையத்திற்குச் செல்லலாம் அல்லது 03-8082-1661, 011-2581-6296ஐ தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்திலும் 300 மாணவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்படும்.


Pengarang :