ECONOMYNATIONALSELANGOR

வியட்நாமியச் சுற்றுலாத் துறையுடன் உறவை வலுப்படுத்த முனைகிறது சிலாங்கூர் சுற்றுலா

ஷா ஆலம், டிச 28 : வியட்நாமியச் சுற்றுலாத் துறையுடன் சிலாங்கூர் சுற்றுலா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, ஆசியாவில் சிலாங்கூர் மாநிலத்தை ஒரு முக்கிய இடமாக அதன் தரத்தை உயர்த்த உள்ளது.

சுற்றுலா, தீம் பூங்காக்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், ஷாப்பிங் சென்டர்கள் மற்றும் ஓய்வு நேர நடவடிக்கைகள் உட்பட சிலாங்கூர் சுற்றுலாக் கண்காட்சியில் பல்வேறு பிரிவுகள் வியட்னாமில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தாகச் சுற்றுலா எஸ்கோவால் தெரிவிக்கப்பட்டது.

“ஆசியாவில் ஒரு முன்னணி சுற்றுலாத் தலமாக  மாறுவதற்கான நடவடிக்கைகளைச் சிலாங்கூர் மேம்படுத்தும் அதே வேளையில், தொழில் முனைவோர் ஒத்துழைப்பையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள சிலாங்கூர் சுற்றுலாத் தயாராக உள்ளது” என்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஆண்டு வியட்நாமில் இருந்து சிலாங்கூருக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மொத்தம் 6,608 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை கோவிட்-19 தொற்று நோய்க்கு முன்னர் 27,075 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

“2023ஆம் ஆண்டை நோக்கி, சிலாங்கூர் தனது முயற்சிகளைத் தொடர இதுவே சரியான நேரம். பயணத் தடை நீக்கப் பட்டதால், சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குச் சுமூகமான முறையில் பயணம் மேற்கொள்ள முடிகிறது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA), KLIA 2, சுபாங் விமான நிலையம் மற்றும் போர்ட் கிளாங் குரூஸ் டெர்மினல் ஆகியவற்றின் பிரதான நுழைவாயில் வழியாக சுற்றுலாப் பயணிகள் எளிதாக எங்கும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


Pengarang :