SELANGOR

ஒரே சமயத்தில் மெது ஓட்டம் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டம் – சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர்

ஷா ஆலம், ஜன. 5: சுபாங் ஜெயா  சட்டமன்ற உறுப்பினர், உள்ளூர் சமூகத்தினருடன் இணைந்து ஒரே சமயத்தில் மெது ஓட்டம் மற்றும் குப்பைகளைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்ய எண்ணம் கொண்டுள்ளார்.

பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் நடைமுறைக்கு பெயர் பெற்ற ஸ்வீடன், ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த நடவடிக்கையை கடைப்பிடித்து வருவதாக மிஷல் இங் கூறினார்

“மேற்கத்திய நாடுகளில், இந்த நடவடிக்கை மிகவும் பிரபலமானது. இந்த நடவடிக்கை நல்லது, ஏனென்றால் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல்,  பொது இடங்ளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது, ”என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

நேற்று, 50க்கும் மேற்பட்ட லுக் துங் குயென் உடற்பயிற்சி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் மிஷல், யுஎஸ்ஜே 1, சுபாங் ஜெயாவில் உள்ள சுபாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) விளையாட்டு மைதானத்தில் துப்பரவு பணியை மேற்கொண்டார்.

“இந்நடவடிக்கை தூய்மை மற்றும் பொது வசதிகளின் மேல் அக்கறை கொண்ட குடியிருப்பாளர்களின் முயற்சியாகும். ஒவ்வொரு வாரமும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டம் உள்ளது,“ என்றார்.

“துப்புரவு உபகரணங்களை வைக்க ஓர் அறையைத் தயார் செய்ய கவுன்சிலுடன் விவாதிப்பேன்,” என்றும் தெரிவித்தார்.


Pengarang :