SELANGOR

 “காடிஸ் இன்ஸ்பிராசி சிலாங்கூர்“ திட்டத்தின் வெற்றியாளருக்கு RM5,000 ரொக்கப் பரிசு

ஷா ஆலம், ஜன 5: மாநில அரசு “வனிதா பெர்டாயா சிலாங்கூர்“ மூலம் ஜனவரி 27 முதல் 29 வரை நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநிலப் பெண்களுக்கான “காடிஸ் இன்ஸ்பிராசி சிலாங்கூர்“ திட்டத்தில் பங்கேற்க திறமையான மற்றும் போட்டித் திறன் கொண்ட இளம் பெண்களைத் தேடுகிறது.

பெண்கள் மற்றும் குடும்ப எஸ்கோ, டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறுகையில், முதல் வெற்றியாளருக்கு RM5,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். தொடர்ந்து இரண்டாவது வெற்றியாளருக்கு RM3,000 மற்றும் மூன்றாம் வெற்றியாளருக்கு RM1,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேலும், 10 சிறப்பு பரிசுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“இந்த திட்டம் இளம் பெண்களின் திறமை மற்றும் திறனை வெளிக்கொணரவும், பொதுமக்களிடத்தில் அவர்களை முன்னிலைப்படுத்தவும், அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, சுய-நிலைத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் ஒரு தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, பங்கேற்பதற்கான நிபந்தனைகள் 18 முதல் 30 வயதுடைய பெண்கள், சிலாங்கூரில் பிறந்து அங்கேயே வசிப்பவர்கள் மற்றும் குறைந்தபட்சம் அவர்களை 5,000 நபர்கள் பல்வேறு சமூக ஊடகங்களில் பின்தொடர வேண்டும்.

பங்கேற்பதற்கான இறுதி நாள் ஜனவரி 14 2023 ஆகும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும்.

மேலும் தகவலுக்கு, https://www.wbselangor.com.my/pencarian-gadis-akan-bermula என்ற இணையதளத்தை நாடவும்.


Pengarang :