SELANGOR

சட்டவிரோதமாக வணிகம் செய்யும் வெளிநாட்டு வியாபாரிகளின் விற்பனை பொருள்கள் பறிமுதல்

ஷா ஆலம், ஜன 5: ஜாலான் பெசார் செலாயாங் பாருவைச் சுற்றி சட்டவிரோதமாக வணிகம் செய்து வரும் வெளிநாட்டு வியாபாரிகளின் விற்பனைக்கான பொருட்கள் நேற்று செலாயாங் நகராட்சி கவுன்சில் (எம்பிஎஸ்) பறிமுதல் செய்தது.

உரிமம் இல்லாமல் வணிகம் நடத்தும் குற்றத்திற்காக 2007 சிறிய வணிகம் சட்டத்தின் (எம்பிஎஸ்) செக்‌ஷன் யுயுகெ (UUK) பிரிவு 3யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் கார்ப்பரேட் துறை தெரிவித்தது.

உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, 45 கூடை காய்கறிகள், நான்கு கூடை தேங்காய்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து மேசைகள், தராசுகள் மற்றும் குடைகள் போன்ற சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“வாகனம் நிறுத்தும் பகுதியில் இடையூறு, தூய்மை மற்றும் நெரிசல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் வணிகம் செய்வது கண்டறியப்பட்டதால், அனைத்து வெளிநாட்டு வணிகர்களும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று நேற்று ஓர் அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதில் உள்ள தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, எம்.பி.எஸ்  தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவ்வப்போது ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வணிகத்தை நடத்துவதற்கு முன் எம்பிஎஸ் அனுமதியைப் பெறுமாறு அனைத்து வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நினைவூட்டப்பட்டது.

“சுற்றுப்புறத்தின் தூய்மையைக் கவனித்துக் கொள்வதோடு, பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதும் அவசியம்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :