SELANGOR

 “யாயாசன் அனாக் வாரிசான் சிலாங்கூர்“ (தவாஸ்) திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பள்ளிக்கான உதவி வழங்கப்படுகிறது

ஷா ஆலம், ஜன 5: “யாயாசன் அனாக் வாரிசான் சிலாங்கூர்“ (தவாஸ்) திட்டத்தில் பதிந்துள்ள 2016 ஆம் ஆண்டு பிறந்த குழந்தைகள், பள்ளி நுழைவு உதவித் திட்டத்திற்கு (பிபிஎம்எஸ்) விண்ணப்பங்களை இந்த சனிக்கிழமை செகிஞ்சன் மாநிலச் சட்டமன்ற அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

ஒப்படைப்பு கவுன்டர் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறந்திருக்கும் என்று யாயாசன் அனாக் வாரிசான் சிலாங்கூர் (யவாஸ்) தெரிவித்தது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க தாய்மார்கள் அல்லது தந்தைகள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“யாவாஸ் செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது http://rms.yawas.ny/member/Register ஐப் பார்வையிடவும். பிபிஎம்எஸ் செயல்முறைகளுக்கு அதில் அடையாள அட்டையையும் கடவுச்சொல்லையும் பதிவு செய்ய வேண்டும்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் சிலாங்கூரில் பிறக்கும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டது. மேலும் ஒரு குழந்தைக்கு மூன்று வயது ஆகும் முன்பே இத்திட்டத்தில் பதிந்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் உறுப்பினர்கள் 18 வயதை அடையும் போது RM1,500 பெறுவார்கள்.


Pengarang :