SELANGOR

பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடர்பில் பொது மக்களின் கருத்துகளைப் பெற சிலாங்கூர் நடவடிக்கை

காஜாங், ஜன 6- மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தக மையங்களிலும்
பிளாஸ்டிக் பை பயன்பாடு தொடர்பில் பயனீட்டாளர்கள் மற்றும்
சம்பந்தப்பட்டத் தரப்பினரிடம் கருத்துகளைப் பெறும் நடவடிக்கையில்
சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்குக் கட்டணம் விதிப்பது அல்லது பிளாஸ்டி
பயன்பாடு இல்லா நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பில்
எந்தெவொரு பேச்சவார்த்தையோ முடிவோ எடுக்கப்படவில்லை என்று
சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்
கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
காரணம், வசூல் மற்றும் பயனீட்டாளர்களின் கருத்து தொடர்பான
தரவுகளை முதலில் ஆராய வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.

அந்த தரவுகள் கிடைக்கப்பெற்ற பின்னேரே பிளாஸ்டிக் பைகளுக்கான
கட்டணத்தை உயர்த்துவது அல்லது கடுமையான விதிகளை
அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும். அது வரை நடப்பில் உள்ள
நடைமுறை தொடர்ந்து நீடிக்கும் என்றார் அவர்.

பண்டார் மாகோத்தா செராஸ் குவாரி பகுதியில் நேற்று ஆய்வு
மேற்கொண்டப் பின்னர் காஜாங் சட்டமன்ற உறுப்பினருமான அவர்
இதனைத் தெரிவித்தார்.

வரும் 2025ஆம் ஆண்டுவாக்கில் மாநிலத்திலுள்ள அனைத்து வர்த்தக
மையங்களிலும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டிற்கு முழுமையாகத் தடை
விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.


Pengarang :