NATIONAL

மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் உணவு விநியோகச் சேவை பாதுகாப்பு

சிரம்பான், ஜன 6 – போக்குவரத்து அமைச்சகம், மோட்டார் சைக்கிள்கள் வழி சேவையை மேம்படுத்தும், பொருள்கள் மற்றும் உணவு விநியோகம் செய்யும் சேவையை மேற்கொள்ளும் (பி-ஹெய்லிங்) குறிப்பாக எதிர்காலத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

அமைச்சர் அந்தோனி லோக் கூறுகையில், இந்த மேம்பாடு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை மட்டுமல்ல, பி-ஹெய்லிங் சேவை தளத்தை வழங்கும் நிறுவனங்களையும் உள்ளடக்கியது என்றார்.

இந்த நடவடிக்கை கிக் பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படுவதற்காக அல்ல, மாறாக மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்று அவர் கூறினார்.

” மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மிக வேகமாகப் பயணம் செய்வதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, ஏனென்றால், இது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்,” என்று லோக் 2023 சாலை பாதுகாப்பு பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில், நாட்டில் பொதுப் போக்குவரத்துக்கு மாற்றாக எந்த ஒரு ” மோட்டார் சைக்கிள் டாக்சி” சேவையையும் அங்கீகரிக்க அமைச்சகம் முடிவு செய்யவில்லை என்றார்.

இந்த டாக்ஸி சேவைக்கான முன்னோடித் திட்டத்தை வெளியிட உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கைகள் உள்ளன, ஆனால் அச்சேவை எவ்வாறு பொருத்தமானது மற்றும் மக்களுக்கு அதை ஏற்றுக் கொள்ள விருப்பம் உள்ளதா என்பதின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று லோக் கூறினார்.

“பேங்கோக் மற்றும் ஜகார்த்தாவில், இது ஏற்றுக் கொள்ளக்கூடிய போக்குவரத்து முறையாகும், ஆனால் நம் நாட்டில் இன்னும் மோட்டார் சைக்கிள்களை டாக்சிகளாகப் பயன்படுத்தத் தயாராக இல்லை என்று நான் நினைக்கிறேன்,” என அவர் மேலும் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :