NATIONALSELANGOR

கிளானா ஜெயாவில் சுவிட்ச் பழுது பார்க்கும் பணியால் தடைப்பட்ட இலகு ரயில் போக்குவரத்து சேவை மீண்டும் வழக்கத்திற்குத் திரும்பியுள்ளது

கோலாலம்பூர், ஜன 6: கிளானா ஜெயா பாதையில் ஏற்பட்ட சுவிட்ச் பழுது பார்க்கும் பணி நேற்று பிற்பகல் 6.42 மணியளவில் நிறைவடைந்ததை தொடர்ந்து இலகு ரயில் போக்குவரத்து (LRT) சேவை நடவடிக்கைகள் வழக்கத்திற்கு திரும்பியுள்ளன.

ரேபிட் ரயில் அறிக்கையில், டிராக் சுவிட்ச் பயன்பாடு ஒரு பாதையில் இருந்து அருகில் உள்ள பாதைக்கு மாற்ற உதவும் என்பதாகும். “தடை ஏற்பட்டவுடன் பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வதற்காக தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டது.

நேற்று மாலை 4.24 மணிக்கு நடந்த முதல் சம்பவத்தால் கேஎல் சென்ட்ரல் ஸ்டேஷன் மற்றும் பாசார் சேனிக் ஸ்டேஷன் இடையே கைமுறையாக ரயில் இயக்கப் பட்டத்தைத் தொடர்ந்து இரண்டாவது தடங்கல் மாலை 5.26 மணிக்கு டாமாய் ஸ்டேஷன் மற்றும் டத்தோ கெரமாட் ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்டது.

ரேபிட் ரெயிலின் கூற்றுப்படி, கேஎல்சிசி நிலையத்திலிருந்து செதியவாங்சா நிலையத்திற்கு மாற்றுப் போக்குவரத்தாக பயணிகளுக்குப் பேருந்து சேவை வழங்கப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயணிகளின் பயணத்தை எளிதாக்குவதற்கு நடவடிக்கை பணியாளர்கள் மற்றும் துணைக் காவல் துறையினரும் இரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிரமங்களை எதிர் கொண்ட பயணிகளிடம் ரேபிட் ரெயில் மன்னிப்பு கேட்டுள்ளது.

-பெர்னாமா


Pengarang :