SELANGOR

கைவிடப்பட்ட வீடுகள் அல்லது காலி நிலங்களைச் சுத்தம் செய்யத் தவறிய உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

ஷா ஆலம், ஜனவரி 6: அம்பாங் ஜெயாவைச் சுற்றியுள்ள கைவிடப்பட்ட வீடுகள் அல்லது காலி நிலங்களின் உரிமையாளர்களுக்கு 14 நாள் நோட்டீஸ் வெளியிடப்படும் அவரவர் வளாகத்தை சுத்தம் செய்யத் தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) தலைவர் முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறுகையில், இடையூறு குறித்து புகார்கள் மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்த எச்சரிக்கையை உரிமையாளர் கடைபிடிக்காவிட்டால், கொசு உற்பத்தியாகும் அல்லது விஷ ஜந்துக்கள் நடமாடும் அபாய இடங்களில் தொல்லைகளை அகற்ற துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தினார்.

“அதற்குப் பின், பிரிவு 82 (5)இன் கீழ் ஒரு அபராத அறிவிப்பு கடிதம் வழங்குவதோடு பிரிவு 82 (4)இன் கீழ் துப்புரவு கட்டணமும் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விதிக்கப்படும்.

“உரிமையாளர்கள் அபராதத்தை செலுத்த எம்பிஏஜே அலுவலகத்திற்கு வர வேண்டும். அபராதத்தை செலுத்த தவறினால் நீதிமன்ற நடவடிக்கை தொடரும்,” என்று ஓர் அறிக்கையில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிக்கு (RM214), ஒரு ஏக்கருக்கு குறைவான காலி நிலங்களுக்கு (RM250) மற்றும் ஒரு ஏக்கருக்கு மேல் உள்ள பகுதிக்கு (RM500) எனத் துப்புரவுக் கட்டணம் கவுன்சிலால் ஏற்கப்பட்டுள்ளது என்று முகமட் ஃபௌசி விளக்கினார்.


Pengarang :