NATIONAL

போலி முத்திரை  “Op contraband“  சோதனையில் RM27 மில்லியனுக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு பொருட்களை மலேசியக் காவல்துறை கைப்பற்றியுள்ளது

கோலாலம்பூர், ஜன. 9: கடத்தல் நடவடிக்கையை தடுக்கும் முயற்சியில் இந்த ஆண்டின் முதல் வாரத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒன்பது “Op contraband“  சோதனையில் RM27 மில்லியனுக்கும் மேல் மதிப்பிலான பல்வேறு பொருட்களை மலேசியக் காவல்துறை (PDRM) கைப்பற்றியுள்ளது.

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம், புலனாய்வு மற்றும் சிறப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை ஆகியவற்றால் நடத்தப்பட்ட சோதனையில் 17 உள்ளூர்வாசிகள் மற்றும் 6 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாக மலேசியக் காவல்துறையின் செயலாளர் டத்தோ நூர்சியா முகமட் சாதுடின் தெரிவித்தார்.

மொத்த பறிமுதலின் மதிப்பு “RM27,400,605.20 ஆகும் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். கடந்த ஆண்டு முழுவதும், இதே நடவடிக்கையின் மூலம் 306 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 132,707,431.40 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

– பெர்னாமா


Pengarang :