SELANGOR

கடந்த வாரம் ஹாட்ஸ்பாட் இடங்களில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன – உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன 10: கடந்த வாரம் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) பரிந்துரைக்கிறது.

கடந்த வாரத்தில் புக்கிட் பெருந்துங் மற்றும் பண்டார் செந்தோசா ஹாட்ஸ்பாட் இடங்களில் மொத்தம் 174 சம்பவங்கள் கண்டறியப்பட்டதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அபார்ட்மெண்ட் டேலியா, அபார்ட்மெண்ட் அங்கரிக், அபார்ட்மெண்ட் தெரதாய், அபார்ட்மெண்ட் செம்பக்கா, அபார்ட்மெண்ட் கெனங்கா மற்றும் அபார்ட்மெண்ட் மாவார் என ஏழு டிங்கி ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன.

இன்று முகநூல் மூலம், “ஒன்றாக இணைந்து ஏடிஸ் இனப்பெருக்கத்தை ஒழிப்போம், வீட்டை சுத்தமாக வைத்திருப்போம்” என்று உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலு சிலாங்கூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இதே போன்ற 45 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், கட்டுப்படுத்தப் படாதப் பகுதிகளில் எந்த சம்பவங்களும் பதிவு செய்யப்படவில்லை என்றும் உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலு சிலாங்கூரில் ஜனவரி 1 முதல் 7 வரை பதிவு செய்யப்பட்ட டிங்கி சம்பவங்களின் தற்போதைய நிலை குறித்த புள்ளிவிவரங்கள் உலு சிலாங்கூர் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் முகநூல் பக்கத்தின் மூலம் வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், உலு சிலாங்கூர் சுகாதார மேம்பாட்டுப் பிரிவு குடியிருப்பாளர்களை எச்சரிக்கும் வகையில் பதாகைகளை நிறுவுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


Pengarang :