SELANGOR

தாமான் புக்கிட் பெர்மாய் 2 ல் உள்ள 15 வீடுகள் வசிப்பதற்குப் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது

அம்பாங் ஜெயா, ஜன 10: கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இங்குள்ள தாமான் புக்கிட் பெர்மாய் 2 டில் உள்ள 15 வீடுகள் வசிப்பதற்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை மற்றும் கும்புலன் இக்ராம் எஸ்பிஎன் பிஎச்டி (இக்ராம்) ஆகியவற்றின் அறிக்கையின் அடிப்படையில், கட்டிடத்தின் கட்டமைப்பில் விரிசல்கள் உள்ள அதே சமயத்தில் அவை பாறைக்கு மிக அருகில் இருப்பதாக உள்கட்டமைப்பு எஸ்கோ கூறியது.

“இந்த செய்தி குடியிருப்பாளர்களுக்கு இதுவரை தெரியாது. கூடிய விரைவில் அவர்களுக்கு அதைப் பற்றி அறிவிக்கப்படும்.

“அவ்விடம் தற்போது நிலைத்தன்மையுடன் இருந்த போதிலும், வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. அதனால், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும்,” என்று ஐ. ஆர் .இஷாம் ஹாஷிம் இன்று அந்த இடத்தை வலுப்படுத்தும் பணியை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், தொடர் நடவடிக்கைகள் மற்றும் குடியிருப்பாளர்களின் சுமையை குறைக்க உதவுவது குறித்து விவாதிக்க இந்த புதன்கிழமை மாநில அரசு கூட்டத்தில் (எம்எம்கே என்) இந்த விஷயம் கொண்டு வரப்படும் என்றார்.

“அதன் பின்னர் அம்பாங் ஜெயா முனிசிபல் கவுன்சில் (எம்பிஏஜே) அவ் வீடுகளின் உரிமையாளர்களுக்கு வெளியேற்ற அறிவிப்பை வெளியிடும்,” என்று அவர் மேலும் கூறினார்.


Pengarang :