SELANGOR

கட்டுமானத் திட்டங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக RM13.46 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுபாங் ஜெயா மாநகர மன்றம்

ஷா ஆலம், ஜனவரி 11: சுபாங் ஜெயா மாநகர மன்றம் (MBSJ) புதிய கட்டுமானத் திட்டங்கள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்காக RM13.46 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

சமிஞ்சை விளக்குகள் மற்றும் பூங்காக்கள் (RM5.28 மில்லியன்), சாலைகள் (RM2.75 மில்லியன்), வடிகால்கள் (RM3.05 மில்லியன்) மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு RM500,000 செலவாகும் என்று மேயர் கூறினார்.

மேலும், விளையாட்டு மைதானம் (RM387,000) மற்றும் பொது கழிப்பறைகள் (RM150,000), பொழுதுபோக்கு மற்றும் அழகுபடுத்தும் மையங்களை மேம்படுத்தும் ஆகிய திட்டத்திற்கு RM350,000 தேவைப்படும் என டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

அதே நேரத்தில், இந்த ஆண்டு திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு பராமரிப்பு RM49.49 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜோஹரி கூறினார்.

அவரது கூற்றுப்படி, சாலை (RM3.9 மில்லியன்), வடிகால் பள்ளங்கள் (RM5.5 மில்லியன்), ஓய்வு பூங்காக்கள் (RM8.5 மில்லியன்), தெரு மற்றும் பூங்கா விளக்குகள் (RM6 மில்லியன்) மற்றும் சாலை சொத்துக்கள் (RM3.5 மில்லியன்) ஆகியவற்றைப் பராமரிப்பதற்கு அந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

“மேலும் RM3.5 மில்லியன் மின்சார உபகரணங்கள் பராமரிப்பு, சமூகத் திட்டங்கள் மற்றும் ஊனமுற்றோர் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பிற பராமரிப்பு நடவடிக்கை களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.


Pengarang :