SELANGOR

அடுத்த மாதம்  சுபாங் ஜெயா  ‘’ வாகனமில்லா தினம்’’  நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள்

ஷா ஆலம், ஜன 11: அடுத்த மாதம் சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் (எம்பிஎஸ்ஜே) ஏற்பாடு செய்துள்ள (கார் ஃப்ரீ டே@ செலமட் பாகி சுபாங் ஜெயா) வாகனம் இல்லா தினம் @ வணக்கம் சுபாங் ஜெயா,  நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் நடைபெறும்.

இந்த நடவடிக்கைகள் ‘தி பிரின்ஸ் க்ரைடீரியம் டெவலப்மென்ட் லீக்’ சைக்கிள் போட்டி மற்றும் 100 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டுதல் (50 சுற்றுகள் x 2 கிமீ) என மேயர் கூறினார்.

“புஷ் பைக் டெவலப்மெண்ட்“ திட்டம், பஸ்கர் போட்டி மற்றும் சுபாங் ஜெயா ஃபுட்சல் இளைஞர் மேம்பாடு நடவடிக்கைகள் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

“மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும் இந்தத் திட்டத்தின் மேம் பாடுகளில் ஒன்றாகும். கூடுதலாக, ஓட்டம் மற்றும் மெதுவான நடை பயிற்சி, வில்வித்தை, காலை உணவு விருந்துகள், சமையல் போட்டிகள் மற்றும் சுகாதாரப் பரிசோதனைகள் உட்பட பல நடவடிக்கைகள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் முகநூலில் நேற்று சுபாங் ஜெயா “காபி டோக்“ நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பின் போது, “இந்த நகரத்தின் சமூகத்திற்கு பல்வேறு ஆரோக்கியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்வதில் எம்பிஎஸ்ஜே உறுதிபூண்டுள்ளது” எனத் தெரிவிக்கப் பட்டது.

சுபாங் ஜெயா சிட்டி கவுன்சில் கார் இல்லா தினம் @ செலமாட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சி காலை 7 மணி முதல் 11 மணி வரை சுபாங் பரேட் மற்றும் ஏயோன் பிக் ஷாப்பிங் மால்க்கு எதிரே உள்ள ஜாலான் பெர்சியாரன் கெமாஜுவானில் நடைபெறும்.

2030ஆம் ஆண்டுக்குள் எம்பிஎஸ்ஜேவைக் குறைந்த கார்பன் நகரமாக மாற்றும் முயற்சியாக இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :