SELANGOR

உணவுக் கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக எட்டு அபராதங்கள் – காஜாங் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன 11: உணவுக் கையாளுதல் மற்றும் உரிமம் தொடர்பான குற்றங்களுக்காக உணவக நடத்துனர்களுக்கு காஜாங் முனிசிபல் கவுன்சில் (எம்பிகேஜே) எட்டு அபராதங்களை விதித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை பண்டார் டமாய் பெர்டானா மற்றும் தாமான் டேசா புக்கிட் சஹாயா ஆகிய இடங்களில் உள்ள ஐந்து உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப் பட்டதாக உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உணவகங்களைச் சோதனை செய்ததன் விளைவாக, டைபாய்டு காய்ச்சல் மற்றும் பிற நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகள் பெறாத குற்றத்திற்காக இரண்டு அபராதங்கள் வழங்கப்பட்டன,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

விற்பனை மற்றும் உணவு தயாரிக்கும் போது சுத்தமான அப்ரோன் மற்றும் தலையை மூடுவதற்கான கவசங்களை பயன்படுத்ததால் மேலும் இரண்டு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக எம்பிகேஜே தெரிவித்தது.

“எண்ணெய் ஈர்க்கும் கருவியைப் பொருத்தாதது, உணவகத்தின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்து பராமரிக்காதது மற்றும் எலிகள், ஈக்கள் அல்லது பூச்சிகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்காதது போன்ற குற்றங்களுக்காகவும் அபராதங்கள் விதிக்கப்பட்டன.

“உணவகத்தின் தரை வழுக்காமல் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் இருப்பதை, உறுதிப்படுத்த தவறிய காரணத்திற்காகவும் அபராதம் வழங்கப்பட்டது,”

எம்பி கேஜே நகராட்சி சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையின் சுகாதாரப் பிரிவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரக் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த 5 பேர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்


Pengarang :