SELANGOR

பூலாவ் இண்டா நெடுஞ்சாலையில் 1,161 எல்.இ.டி. சோலார் விளக்குகள் – சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் தகவல்

ஷா ஆலம் ஜன 11- சோலார் எனப்படும் சூரிய சக்தியின் மூலம் இயங்கக்கூடிய 1,161 எல்.இ.டி. விளக்குகள் பூலாவ் இண்டா நெடுஞ்சலை
நெடுகிலும் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நோக்கத்திற்காக கிள்ளான் துறைமுகப் பகுதியில் இதுவரை 531
விளக்குத் துண்கள் நிறுவப்பட்டுள்ளதாக கோலக் கிள்ளான் சட்டமன்ற
உறுப்பினர் அஸ்மிஸாம் ஸமான் ஹூரி கூறினார்.

கோலக் கிள்ளான் பகுதியில் ஒளியூட்டும் திட்டத்தை மேற்கொள்வதில்
நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இதுவரை 531 துண்கள்
பொருத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் 630 ண்களைப் பொருத்தும் பணி
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

பூலாவ் இண்டா நெடுஞ்சாலையிலிருந்து வெஸ்ட் போர்ட் துறைமுகம்
செல்லும் பகுதியில் இதுநாள் வரை சாலை விளக்கு
பொருத்தப்படாமலிருந்த து. இதனால் வாகமோட்டிகள் குறிப்பாக சிறிய
வாகனங்களைப் பயன்டுத்துவோர் மிகுந்த ஆபத்தை எதிர்நோக்கி வந்தனர்
என்றார் அவர்.

அந்த விளக்குகளைப் பொருத்துவது தொடர்பில் பொதுப் பணித் துறையின்
மின் பொறியியல் பிரிவு தற்போது ஆய்வினை மேற்கொண்டு வருகிறது
என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :