SELANGOR

 “சுபாங் ஜெயா ஸ்மார்ட் வைப்ரன்ட் சமூக மானியம்“ 2023 க்கு விண்ணப்பிக்கலாம் – சுபாங் ஜெயா நகர கவுன்சில்

ஷா ஆலம், ஜன 11: சுபாங் ஜெயா நகர கவுன்சில் (MBSJ) சுபாங் ஜெயா ஸ்மார்ட் வைப்ரன்ட் சமூக மானியம் 2023க்கு விண்ணப்பிக்க அப்பகுதியைச் சேர்ந்த சமூக அமைப்புகளை அழைக்கிறது.

சுபாங் ஜெயா வில் உள்ள எந்த ஒரு அமைப்பு, அரசு சாரா அமைப்பு, குடியுரிமை சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை சமூக மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று டத்தோ பண்டார் டத்தோ ஜோஹாரி அனுவார் கூறினார்.

“சமூகப் பங்கேற்பு க்கு உதவும் இந்த மானியத்திற்கு மொத்தம் RM3 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

“திட்டத்தைச் செயல்படுத்த அமைப்புகள் முக்கிய அளவுகோல்களை பின்பற்ற வேண்டும், அவற்றில் வளமான நகரம், பாதுகாப்பான நகரம், ஸ்மார்ட் நகரம், பசுமை நகரம், ஆரோக்கியமான மற்றும் வளமான நகரம் ஆகிய கூறுகள் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நேற்று எம்பிஎஸ்ஜேயின் முகநூலில் சுபாங் ஜெயா காபி  டோக் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்தப் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முதன் முறையாக இந்த முயற்சி ஏற்பாடு செய்யப் பட்டதால், பங்கேற்பாளர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களைச் செயல்படுத்த முடியும் என்றும் நகரத்தின் நிலைத்தன்மை நோக்கங்களை அடைய முடியும் என்றும் ஜோஹரி நம்பினார்.

“இந்த மானியம் அவர்கள் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் பொறுத்து குறைந்தபட்சம் RM8,000 முதல் அதிகபட்சம் RM50,000 வரை வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.

மானியம் பற்றிய கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் http://www.mbsj.gov.my அல்லது உள்ளூர் அதிகாரசபையின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகத்தில் காணலாம்.


Pengarang :