SELANGOR

கிக் (gig) தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பண உதவி – மாநில அரசாங்கம்

ஷா ஆலம், ஜன 11: கிக் (gig) தொழிலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு முன் பணத்தைச் செலுத்த உதவும் பைக்கேர்-1000 திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜனவரி 27 வரை திறந்திருக்கும்.

சிலாங்கூர் தொழிலாளர் பிரிவு (UPPS) இந்தத் திட்டம், மோட்டார் சைக்கிள்களை வாங்க வேண்டிய கிக் தொழிலாளர்களுக்கு (p-hailing) உதவுவதற்காக மாநில அரசாங்கத்தின் திட்டம் என்று தெரிவித்தது.

“கிக் எக்கோனமிக் துறையில் ஈடுபட விரும்பும் தொழிலாளர்களின் சுமையைக் குறைக்க இந்த உதவி வழங்கப்படுகிறது.

“சிலாங்கூர் குடிமக்கள், 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், மோட்டார் சைக்கிள் உரிமம் பெற்றவர்கள் மற்றும் CTOS/CCRIS ஆல் தடுப்புப் பட்டியலில் சேர்க்கப்படாத விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த உதவியைப் பெறுவர்” என்று முகநூல் மூலம் இன்று தெரிவிக்கப்பட்டது.

முழுமையான விண்ணப்பப் படிவம் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை கிழக்கு நுழைவாய், ஐடியல் கன்வென்ஷன் சென்டர் (IDCC) ஷா ஆலமில் உள்ள யுபிபிஎஸ் (UPPS) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு 016-959 8320 (Fatin Shafira) என்ற எண்ணிற்கு அழைக்கவும்.


Pengarang :