SELANGOR

தைப்பூசக் கடைகளுக்கு வரும் 19ஆம் தேதி குலுக்கல் நடைபெறும் செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

செலாயாங், ஜன 13- இவ்வாண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு
வியாபாரம் செய்வதற்கு 236 வர்த்தக இடங்களை செலாயாங் நகராண்மைக்
கழகம் ஒதுக்கியுள்ளது. இந்த கடைகளுக்கான குலுக்கல் பத்து கேவ்ஸ்,
தாமான் ஸ்ரீ கோம்பாக், டேவான் பெரிங்கினில் இம்மாதம் 19ஆம் தேதி
நடைபெறும்.

இந்த குலுக்கல் நிகழ்வு காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
நடைபெறும் என்று செலாயாங் நகராண்மைக் கழகத்தின் வர்த்தக மற்றும்
பொது உறவுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

உணவு மற்றும் பானங்கள், உலர்ந்த பொருள்கள், முடிதிருத்தும் கடைகள்
மற்றும் வாகனங்கள் மூலம் வியாபாரம் செய்வதற்கான இடங்களுக்கு
குலுக்கல் நடைபெறுவதாக அது தெரிவித்தது.

மாற்றுத் திறனாளிகள் சங்கத்திற்கு 15 வர்த்தக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள
வேளையில் 221 இடங்கள் இதர வணிகர்களுக்கு விற்கப்படும். இதில்
பொது மக்கள் அதிகம் கூடும் 85 ஹாட்ஸ்போட் இடங்களும் அடங்கும்.

உலர்ந்த பொருள்கள், உணவு மற்றும் பானங்களை விற்பதற்கு 110
இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான கட்டணம் 200 வெள்ளியாகும். 16
முடிதிருத்தும் கடைகளுக்குத் தலா 250 வெள்ளி கட்டணம் விதிக்கப்படும்.

மக்கள் அதிகம் கூடும் ஹாட்ஸ்போட் பகுதிகளில் உள்ள உணவு மற்றும்
பான விற்பனைக் கடைகளுக்கு 500 வெள்ளி கட்டணமும் ஹாஸ்ஸ்போட்
பகுதியிலுள்ள முடிதிருத்தும் கடைகளுக்கு 600 வெள்ளி கட்டணமும்
விதிக்கப்படும்.

உணவு மற்றும் பானங்களை விற்போர் டைபாய்டு தடுப்பூசியும் உணவைக்
கையாள்வது தொடர்பான பயிற்சி சான்றிதழையும் பெற்றிருக் வேண்டும
என்று நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது. முடி திருத்துவோர் மருத்துவப் பரிசோதனை சான்றிதழை (ஹெப்படைடிஸ், எச்.ஐ.வி. மற்றும் டி.பி.) கொண்டிருக்க வேண்டும்.


Pengarang :