SELANGOR

சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க தவறியதால் இரண்டு உணவகங்கள் மூடப்பட்டன – உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில்

ஷா ஆலம், ஜன 13: உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஹெச்எஸ்) நிர்ணயித்த சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க தவறியதால் இரண்டு உணவகங்களை மூட உத்தரவிடப் பட்டது.

உள்ளூர் அதிகாரசபை (PBT) நேற்று டத்தாரான் செந்தோசா புக்கிட் செந்தோசாவில் “ஆபரேஷன் சூசியுடன்“ இணைந்து நான்கு அபராதங்கள் மற்றும் எட்டு நோட்டிஸ்கள் வெளியிட்டதாக தெரிவித்தது.

“எம்பிஎச்எஸ் வாடகை வணிகத் தளத்தில் உள்ள வர்த்தகர்கள் நிபந்தனைகள் மற்றும் தூய்மையைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு உணவகங்கள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் இரண்டு மூடப்பட்டன.

“உணவகங்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் நடந்துள்ளன ஆனால், உணவகத்தின் கட்டிட அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது துப்புரவுத் துறையின் கட்டுப்பாடு மற்றும் தரப்படுத்தல் பிரிவு, உரிமம் வழங்கும் துறை மற்றும் கட்டிட திணைக்களம் ஆகியவை இணைந்து செயல் பட்டதில் உரிமம் இல்லாமல் வணிகம் நடத்தும் ஒரு வர்த்தகம் கண்டு பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Pengarang :