NATIONAL

புக்கிட் லாருட்டில் நிலச்சரிவு

தைப்பிங், ஜன 13: நேற்று மாலை புக்கிட் லாருட்டில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து அங்குள்ள நிர்வாக ஊழியர்கள் பலர் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

பிற்பகல் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பிரதான சாலையில் மரங்கள் மற்றும் மண் சரிந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

புக்கிட் லாரூட் சுற்றுலா மையத்தின் முகநூல் மூலம் பகிரப்பட்ட தகவல்களின் வழி, அனைத்து ஊழியர்களும் ஸ்டேஷன் மற்றும் கிலோமீட்டர் 10 தில் உள்ள தங்கும் பங்களாவில் சிக்கித் தவிக்கின்றனர் எனத் தெரியவந்துள்ளது.

நிலச்சரிவு சம்பவம் வாட்டர்மெல்லனிலிருந்து பொண்டோக் 1 வரையிலான பகுதியைச் சம்பந்தப்பட்டுள்ள தாகச் சினார் ஹரியான் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலா பகுதிகளில் ஆபத்தைத் தவிர்க்கும் வகையில் அவை முற்றாக மூடப்பட்டதாக தைப்பிங் முனிசிபல் கவுன்சில் (MPT) தெரிவித்துள்ளது.

“பாதுகாப்பு மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, குறிப்பாக பொதுப்பணித் துறையில் இருந்து (ஜே.கே.ஆர்) எதிர்பார்க்கப்படும் மூடல் காலம் அறிவிக்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :