SELANGOR

சீனப் புத்தாண்டு பொது இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு RM10,000 மதிப்பிலான ஆங்பாவ் வழங்கப்படும்

ஷா ஆலம், ஜன 16: ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் மாநில அளவிலான சீனப் புத்தாண்டு பொது இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு RM10,000 மதிப்புள்ள ஆங்பாவ் வழங்கப்படும்.

முதல் 2,000 பேருக்கு மட்டுமே இந்த அன்பளிப்பு வழங்கப்படும். மேலும், அந்நிகழ்வுக்கு வருகை புரிவோருக்கு RM3,000 மதிப்புள்ள மின்சாதனப் பொருட்கள் அதிர்ஷ்டக் குலுக்கல் வழியாக வழங்கப்படும் என்று தொழில்துறை மற்றும் வர்த்தக எஸ்கோவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“விருந்தினர்கள் Wavpay இ-வாலட் பயன்பாட்டைப் பதிவேற்றி, கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த செயல்முறை மூலம்தான் ஆங்பாவ் வழங்கப்படும்” என்று டத்தோ தெங் சாங் கிம் இன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஷா ஆலம் டதாரன் மெர்டேகாவில் பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 10,000 விருந்தினர்களை இலக்காகக் கொண்ட இந்த நிகழ்வு நடைபெறும்..

கோவிட் -19 பரவியதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யவில்லை. சிங்க நடனம், பாரம்பரிய ஓபராக்கள், பொம்மலாட்டம், கலிகிராவி போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும்.

இதற்கிடையில், பொதுமக்கள் கலந்து கொள்வதை எளிதாக்கும் வகையில், சிலாங்கூர் ஸ்மார்ட் பஸ் SA01 மற்றும் SA02 இரவு 10.30 மணி வரை செயலில் இருக்கும்.

“பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு SACC ஷாப்பிங் சென்டர், ஆலம் சென்ட்ரல் பிளாசா, சிலாங்கூர் மாநில வளர்ச்சிக் கழகம் (PKNS) கட்டிடம் மற்றும் மேபேங்க் கட்டிடத்தின் அருகில் உள்ள கட்டண வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்தலாம்” என்று அவர் கூறினார்.


Pengarang :