NATIONAL

அம்பாங் புக்கிட் பெர்மாயில் உள்ள 15 வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜன 16: அம்பாங்கில் உள்ள புக்கிட் பெர்மாய் கட்டுமான திட்டம்  (பாச fasa) 2யில் உள்ள 15 வீடுகளில் வசிப்பவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளைக் காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மண் நகர்வு காரணமாக அப்பகுதியில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று கண்டறியப் பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“அம்பாங் ஜெயா நகராட்சி கவுன்சில் அங்குள்ள 15 வீடுகளில் வசிப்பவர்களுக்கு காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உலு லங்காட் மாவட்ட மற்றும்  நில  அலுவலகத்தின் முழுமையான பகுப்பாய்வு அறிக்கை முடிவடையும் வரை காத்திருக்கும் நிலையில், அப்பகுதியை சரி செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமிருடின் விளக்கினார்.

கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி, அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, உள்கட்டமைப்பு எஸ்கோ ஐஆர் இஷாம் அசிம், அவ்விடத்தைச் சரி செய்யும் பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியதில் இருந்து தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.


Pengarang :