ANTARABANGSA

பிரதமர் அன்வாருடன் சிங்கை வெளியுறவு அமைச்சர் சந்திப்பு

கோலாலம்பூர், ஜன 18- மலேசியாவுக்கு வருகை புரிந்திருக்கும் சிங்கப்பூர்
வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் நலன் சார்ந்த மற்றும் வட்டார
விவகாரங்கள் குறித்து தாமும் பாலகிருஷ்ணனும் கருத்துகளைப் பரிமாறிக்
கொண்டதாக டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

பொருளாதாரம் மற்றும் நிலுவையில் இருக்கும் இரு நாடுகள்
சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காண்பதில் கவனம்
செலுத்துவதற்கான விருப்பத்தைத் தாம் பாலகிருஷ்ணனிடம்
வெளிப்படுத்தியதாக அவர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு பாலகிருஷ்ணன்
மலேசியா வந்துள்ளார்.

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-
முஸ்தாபா பில்லா ஷா பாலகிருஷ்ணனை நேற்று இஸ்தானா
நெகாராவில் சந்தித்தார்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீருடனும்
பாலகிருஷ்ணன் நேற்று சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பில்
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நீண்டகால உறவை
மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.


Pengarang :