SELANGOR

எம்.பி.கே.எல். துப்புரவு இயக்கத்தில் பயன்படுத்தப்படாத 32 தொலைபேசிக் கூண்டுகள்

ஷா ஆலம், ஜன 18- கோல லங்காட் வட்டாரத்தில் நேற்று முன்தினம்
தொடங்கி இரு தினங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துப்புரவு இயக்கத்தில்
டெலிகோம் மலேசியா சின்னம் பொறிக்கப்பட்ட 32 பயன்படுத்தப்படாதத்
தொலைபேசிக் கூண்டுகள் அழிக்கப்பட்டன.

இந்த துப்புரவு நடவடிக்கையில் கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின்
எட்டு திடக்கழிவு மேலாண்மைப் பணியாளர்கள், நான்கு அமலாக்கப்
பிரிவினர் மற்றும் மூன்று டெலிகோம் மலேசியா பணியாளர்கள் பங்கு
கொண்டதாக நகராண்மைக் கழகம் கூறியது.

பெக்கான் பந்திங், தாமான் செம்பாக்கா, தாமான் புடிமான், தாமான் அமான்
பந்திங், தாமான் பந்திங் ஜெயா, தாமான் ஸ்ரீ புத்ரா, தாமான் பந்திங் பாரு,
தாமான் ஸ்ரீ பந்திங், பண்டார் மக்கோத்தா பந்திங், தாமான் ரம்பாய் இண்டா
ஆகிய இடங்களில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என அது
தெரிவித்தது.

அந்த தொலைபேசி கூண்டுகள் இனியும் பயன்பாட்டில் இல்லாதவை என
டெலிகோம் மலேசியா நிறுவனம் உறுதி செய்ததைத் தொடர்ந்து
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நகராண்மைக் கழகம் தனது
பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டது.


Pengarang :