SELANGOR

அடிக்கடி விபத்துகள் நிகழும் நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகம்

கிள்ளான், 18 ஜன: தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகம் (IPD) அதன் நிர்வாகப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும் நான்கு இடங்களை அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக அந்த விபத்துகளில் பாதிக்கப்படுபவர்கள் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களே ஆகும்.

அந்த இடங்கள் பெர்சியாரான் தெங்கு அம்புவான் ரஹிமா, பெர்சியாரான் ராஜா மூடா மூசா, ஜாலான் பெலபுஹான் பராட் மற்றும் குறுக்குவழிச் சாலை (ஜாலான் பெலபுஹான் மேற்கு நோக்கி ஜாலான் பெலபுஹான் உதாரா) ஆகியவையாகும் எனத் தெற்கு கிள்ளான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

“அந்த அனைத்து சாலைகளும் கனரக வாகனங்கள் அடிக்கடி செல்லும் பகுதிகளாகும்,” என்று தெரிவித்தார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு வீடு திரும்பும் போது கவனமாக இருக்க சாலைப் பயனாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தெற்கு கிள்ளான் IPD அளவில் “Op Selamat 19/2023“ திட்டம் இன்று முதல் ஜனவரி 27 வரை தொடங்கப்பட்டது.

இதற்கிடையில், தெற்கு கிள்ளான் IPD உறுப்பினர்களில் சுமார் 80 சதவீதம் பேர் இந்த வார இறுதியில் சீனப் புத்தாண்டின் போது ரோந்து மற்றும் சோதனை பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும், அவரவர் பணிபுரியும் நிலையங்களில் எப்போதும் தயார் நிலையில் இருப்பர்.

இருப்பினும், சொந்த ஊர்களுக்கு திரும்பாதப் பொதுமக்கள் தங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்து புகார் தெரிவிக்குமாறு கேட்டுகொள்ளப் படுகின்றனர்.

– பெர்னாமா


Pengarang :