HEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்றினால் நேற்று 371 பேர் பாதிப்பு- நால்வர் உயிரிழப்பு

கோலாலம்பூர், ஜன 19- நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை
நேற்று 371 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை
350 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 நோய்த்
தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 33
ஆயிரத்து 625 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 10,390 பேர் இந்நோய்த் தொற்றின் தீவிர பாதிப்பை
எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம்
கூறியது.

சிலாங்கூரில் மிக அதிகமாக 148 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ள
வேளையில் அதற்கு அடுத்த நிலையில் கோலாலம்பூரில் 70 பேரும்
பேராக்கில் 21 பேரும் சரவாக் மாநிலத்தில் 19 பேரும் மலாக்காவில் 18
பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள்
நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்குப் பலியானவர்களின்
மொத்த எண்ணிக்கை 36,923 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நோய்த் தொற்று காரணமாக உயரிழப்போரின் தினசரி சராசரி
எண்ணிக்கை கடந்த வாரம் முதல் 3.1 ஆக இருந்தது. 30 நாட்களுக்கு
முன்னர் இந்த எண்ணிக்கை 3.8 ஆக பதிவாகியிருந்தது.


Pengarang :