NATIONAL

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் அவசரகாலப் பாதையைப் பயன்படுத்திய ஓட்டுனர்களின் நடவடிக்கை ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது

ஷா ஆலம், ஜன. 25: சிறுநீர் கழிக்க உடனடியாக நிறுத்தத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்ததால் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் அவசரகாலப் பாதையைப் பயன்படுத்தியதாக ஓட்டுநர்கள் காரணம் தெரிவித்தனர்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறை ட்ரோன் கண்காணிப்பு மூலம் தங்கள் நடவடிக்கைகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதை அறியாத பெரும்பாலான பயனர்கள் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது திருப்தி அடையவில்லை என்று ஹரியன் மெட்ரோ தெரிவித்துள்ளது.

அவசரகாலப் பாதையைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொள்ளாத ஓட்டுநர்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் செய்தக் குற்றத்திற்கான வீடியோ ஆதாரங்களையும் படங்களையும் காட்டியப் பிறகு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

சாலையில் வரிசையை முந்தி செல்லுதல் மற்றும் ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்வது ஆகிய செயல்களுக்கு 56 சம்மன்கள் வழங்கப்பட்டது என்று புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்கப் புலனாய்வுத் துறையின் (பொதுக் காவல்/விசாரணை/வளங்கள்) துணை இயக்குனர் தெரிவித்தார்.

“அவசரப் பாதையை பயன்படுத்துவது சாலை பயனர்களிடையே பொதுவான தவறுஆகும். மேலும் போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் சாலையில் கவனமாக இருக்குமாறு பயனர்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று உதவி ஆணையர் முகமட் ராடி அப்த் ரஹ்மான் கூறினார்.


Pengarang :