SELANGOR

சுங்கை பெஞ்சாலா நடைபாதை பிப்ரவரியில் திறக்கப்படும்

ஷா ஆலம், ஜனவரி 25: பெட்டாலிங் ஜெயா செக்‌ஷன் 14இல் உள்ள சுங்கை பெஞ்சாலா நடைபாதை இந்த பிப்ரவரியில் பொதுமக்களுக்குத் திறக்கப்படும். இப் பாதை மக்களால் பொழுது போக்கு இடமாகவும் பயன்படுத்தப் படுகிறது.

புக்கிட் காசிங் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் (ADN) கூறுகையில், பெஞ்சாலா நதியின் 700 மீட்டர் நீளப் பாதை பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பயனாக இருக்கிறது.

“அப்பாதையை மேம்படுத்தும் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. அடுத்த வாரம், அதாவது பிப்ரவரி மாதத்தில், மக்கள் இந்த பாதையை பயன்படுத்த முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

“மிக முக்கியமாக இந்த பாதை செக்‌ஷன் 19 மற்றும் தாமான் ஜெயா எல்ஆர்டி நிலையத்தின் வணிகப் பகுதியை  இணைக்கிறது” என்று ராஜீவ் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அவரது கூற்றுப்படி, 700 மீட்டர் நீளமுள்ள பாதையானது டதாரன் மிலேனியம், செக்‌ஷன் 14 இல் தொடங்கி, பெட்டாலிங் ஜெயா செக்‌ஷன் 19 இல் உள்ள டொயோட்டா கட்டிடத்தின் முன் முடிவடைகிறது.

“இந்தப் பாதை இருப்பதன் மூலம், சுற்றுவட்டாரச் சமூகத்தினர் அதைப் பொழுது போக்குக்காகப் பயன்படுத்தும் ஒரு தேர்வாக இருக்கும் என்று நம்பப்படுகிறது,” என அவர் கூறினார்


Pengarang :