ALAM SEKITAR & CUACANATIONAL

ஜொகூரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது- நண்பல் வரை 3,967 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

ஜொகூர் பாரு, ஜன 25- ஜோகூர் மாநிலத்தில் வெள்ள நிலைமை
அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதோடு துயர் துடைப்பு
யைங்களில் அடைக்கலம் நாடியவர்களின் எண்ணிக்கை இன்று நண்பகல்
12.00 மணி வரை 3,967 ஆக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி துயர் துடைப்பு மையங்களில்
தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை 3,612 ஆக இருந்ததாக மாநில பேரிடர்
மேலாண்மை செயல்குழு கூறியது.

புதிதாக ஆறு துயர் துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ள வேளையில்
இதனுடன் சேர்த்து ஐந்து மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு
மையங்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளதாக அது தெரிவித்தது.

வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சிகாமாட்
விளங்குகிறது. இங்குள்ள 16 துயர் துடைப்பு மையங்களில் 399
குடும்பங்களைச் சேர்ந்த 1,417 பேர் அடைக்கம் நாடியுள்ளனர்.

குளுவாங்கில் உள்ள 11 துயர் துடைப்பு மையங்களில் 341 குடும்பங்களைச்
சேர்ந்த 1,191 பேர் தங்கியுள்ளனர். கோத்தா திங்கியில் செயல்படும் ஆறு
நிவாரண மையங்களில் 138 குடும்பங்களைச் சேர்ந்த 568 பேர் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.

மெர்சிங் மாவட்டத்தில் நான்கு துயர் துடைப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ள வேளையில் அதில் 194 குடும்பங்களைச் சேர்ந்த 640 பேர்
அடைக்கம் நாடியுள்ளனர்.

பத்து பகாட்டில் திறக்கப்பட்டுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 32
குடும்பங்களை சேர்ந்த 151 பேர் தங்கியுள்ளனர். மூவார் மாவட்டத்தில்
வெள்ளம் ஏற்படும் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு இரு துயர் துடைப்பு
மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.


Pengarang :