தஞ்சோங் காராங் சாலையின் ஓரங்களை சீமைக்கும் பணியை இன்ஃப்ராசெல் மேற்கொண்டது

ஷா ஆலம், ஜன 27- பொது மக்களிடமிருந்து புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் தஞ்சோங் காராங் சாலையின் ஓரத்தை சீரமைக்கும் பணியை இன்ஃபராசெல் நிறுவனம் மேற்கொண்டது.

பொது மக்களிடமிருந்து கடந்த புதன்கிழமை கிடைத்த புகாரைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட அந்நிறுவனம் கோல சிலாங்கூர் மாவட்டத்திலுள்ள அந்த சாலையைப் சீரமைக்கும் பணியை விரைந்து மேற்கொண்டது.

மாநிலத்தில் சாலைகளைச் சீரமைக்கும் பணிக்கு இந்த இன்ஃப்ராசெல் சென். பெர்ஹாட் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகளில் காணப்படும் பழுதுகள் தொடர்பான புகாரை சமூக ஊடகங்கள வாயிலாக தெரிவிக்கும்படி அந்நிறுவனம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.

மாநில சாலைகளை பழுதுபார்ப்பது மற்றும் விரிவு படுத்துவதற்காக ஐந்து கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அண்மையில் கூறியிருந்தார்.

வாகனமோட்டிகளின் வசதிக்காக மாநிலத்திலுள் சாலைகளை சீரமைக்கும் பணி வரும் மார்ச் மாதம் தொடங்கி பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என்று அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்கு உறுப்பினர் இஷாம் ஹஷிம் முன்னதாக அறிவித்திருந்தார்.

மாநில அரசின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட இந்த 5 கோடி வெள்ளி நிதியின் மூலம் ஊராட்சி மன்றங்களின் அதிகாரத்திற்குற்பட்ட சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்படும்.


Pengarang :