ALAM SEKITAR & CUACANATIONAL

மூன்று மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு

கோலாலம்பூர்,  ஜன 28: மூன்று மாநிலங்களில் மொத்தம் 13,827 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 73 தற்காலிக தங்கும் மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜொகூரில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 3,480 பேராக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றிரவு 3,328 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இம்மாநிலத்தில் 35 தற்காலிக தங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தில் உள்ள நான்கு ஆறுகள் அபாய அளவை கடந்துள்ளன. அவை லாடாங் ச்ஷாவில் உள்ள சுங்கை லெனிக், கம்பங் சொந்தோவில் உள்ள சுங்கை கஹாங், புக்கிட் கெபோங்கில் உள்ள சுங்கை முவார் மற்றும் மெர்சிங்கில் உள்ள சுங்கை எண்டாவ்.

இதற்கிடையில், சபா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி நிலவரப்படி 3,569 குடும்பங்களைச் சேர்ந்த 10,347 பேராக அதிகரித்துள்ளது. மேலும் ஆறு மாவட்டங்களில் தற்காலிகத் தங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

பகாங் மாநிலத்தில் இன்று காலை ரொம்பினில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 106 குடும்பங்களைச் சேர்ந்த 353 பேராகும். அங்கு இன்னும் நான்கு பிபிஎஸ் மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும், ரொம்பினில் உள்ள சுங்கை கெரோதோங் அபாய அளவை தாண்டி உள்ளது.

– பெர்னாமா


Pengarang :