SELANGOR

நான்கு நாட்களுக்கு ரவாங்கில் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜன 30: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அடிப்படைப் பொருள்களின் மலிவு விற்பனை நேற்று  தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ரவாங்கைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறும்.

கம்போங் மேலாயு பெக்கனில் கிராமச் சமூக மேலாண்மை கவுன்சில் மண்டபத்தில் (MPKK), செவ்வாய்க் கிழமை தாமான்  தாசெக் பெர்சதுவிலும் மலிவு விற்பனைகள் நடைபெறுவதாக அதன் பிரதிநிதி கூறினார்.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (பிகேபிஎஸ்) நடத்தப்படும் இந்த மலிவு விற்பனை, கம்போங் சுங்கை தெரெந்தங்கில் புதன்கிழமையும் கம்போங் கெனாங்கா எம்பிகேகே மண்டபத்தில் வியாழக்கிழமையும் நடைபெறும் எனச் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.

“இந்த விற்பனை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். ரவாங் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று முகநூலில் பதிவிட்டார்.

பொதுமக்கள் அவ்வப்போது விற்பனை இடங்களைப் பற்றிய அறிய linktr.ee/myPKPS என்ற இணைப்பைப் பார்வையிடலாம்.


Pengarang :