ALAM SEKITAR & CUACA

ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கோலாலம்பூர்,  ஜன 30: ஜொகூர் மற்றும் சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது அதே வேளையில் பகாங்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று இரவு தற்காலிகத் தங்கும் மையத்தில் (பி பி எஸ்) 219 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

ஜொகூரில் இரவு 8 மணி நிலவரப்படி ஆறு மாவட்டங்களில் 718 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 2,564 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழு (JPBN) ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தது. அங்கு மொத்தம் இதுவரை 31 பிபிஎஸ் மையங்கள் இயங்குகின்றன.

சுங்கை எண்டாவ், மெர்சிங் இன்னும் 2.79 மீட்டர் அளவோடு அபாய அளவை கடந்துள்ளது.

ரொம்பினில் உள்ள சுங்கை கெராதோங்கின் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாக உள்ளது: ஆனால் குறையும் போக்கைக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சபாவில், இன்றிரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 585 குடும்பங்களில் சேர்ந்த 1,419 பேராகக் குறைந்துள்ளது. சபாவின் ஜேபிபிஎன் செயலகம் ஒரு அறிக்கையில் அங்குள்ள இரண்டு பிபிஎஸ்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 – பெர்னாமா


Pengarang :