SELANGOR

கொசுக்கள் உற்பத்தி ஆகும் கட்டுமான தளம் மூடப்பட்டது – ஷா ஆலம் நகராண்மை கழகம்

ஷா ஆலம், பிப் 3: ஷா ஆலம் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்ஏ) நேற்று, பிரிவு U8இல் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் கொசுக்கள் உற்பத்தி செய்யும் இடமாக மாறிய ஒரு கட்டுமான தளத்தை மூடியது.

சம்பந்தப்பட்ட இடத்தில் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, சுத்தம் செய்ய ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மற்றும் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து சுத்தம் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

டிங்கி காய்ச்சல் அதிகரிப்புக்கு கட்டுமானப் பகுதிகள் முக்கிய காரணிகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

“டெவலப்பர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கட்டுமானப் பகுதிகள் ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் வேண்டும்.


Pengarang :