SELANGOR

(SMUE) திட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கிள்ளான், பிப்.5: போர்ட் கிள்ளான் மாநிலச் சட்டமன்றத்தில் (DUN) ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமஸ் (SMUE) திட்டத்தில்  இந்த ஆண்டு தொடக்கத்தில் பதிந்த கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு உறுப்பினருக்கும் வழங்கும் RM100 வவுச்சர் மதிப்பு RM150 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளதாக அதன் பிரதிநிதி அஸ்மிசாம் ஜமான் ஹுரி தெரிவித்தார். இதுவும் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாகவும் என்றார்.

  “திங்கள் முதல் வெள்ளி வரை பல முதியவர்கள் சேவை மையத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்ய வருகிறார்கள். மூன்று நாட்களுக்குள், கிட்டத்தட்ட 1,000 பதிவுகளைப் பெற்றோம் என்றார்.

“இருப்பினும், அனைத்து விண்ணப்பங்களும் மதிப்பாய்வு செய்யப்படும். இதன்வழி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் கண்டறியப்படும்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு முதல், SMUE வவுச்சரின் மதிப்பு RM150 ஆக உயர்த்தப் பட்டதால் இத்திட்டத்திற்கு RM37.5 மில்லியன் ஒதுக்கீடு தேவைப்படுகிறது. 

ஜோம் ஷாப்பிங் வவுச்சர் பெறுபவர்களுக்கான குடும்ப வருமான தகுதி மாதத்திற்கு RM2,000 லிருந்து RM3,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இத்திட்டத்தின் உறுப்பினர்கள் சமூகச் சேவை மையத்தின் மூலம் தங்கள் பிறந்த மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்பொருள் அங்காடிகளில் RM100 ஷாப்பிங் வவுச்சரைப் பெற்றனர்.


Pengarang :