NATIONAL

துருக்கி, சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு டத்தோ மந்திரி புசார் இரங்கல் தெரிவித்தார்

ஷா ஆலம், பிப் 7: துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு டத்தோ மந்திரி புசார் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

ஏற்பட்ட பேரழிவை நினைத்து சிலாங்கூர் மக்கள் வருந்துவதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது பிராத்தனைகள் #PrayForTurkiye” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நேற்று, தெற்கு துருக்கியில் 7.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்டதாகவும், இது பசார்சிக் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன மற்றும் அதன் தாக்கம் லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

உலகச் சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சமீபத்திய இறப்பு எண்ணிக்கை 3,400 ஆக பதிவாகியுள்ளது மற்றும் இந்த எண்ணிக்கை எட்டு மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டவர்களைத் தேடுதல் மற்றும் மீட்கும் (SAR)  நடவடிக்கைகளுக்கு உதவ மலேசியச் சிறப்பு தேடல் மற்றும் மீட்புக் குழுவைச் (SMART)  சேர்ந்த 75 உறுப்பினர்களை மலேசிய அனுப்பியுள்ளது.


Pengarang :