SELANGOR

சுகாதார அமைச்சகம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்க வேண்டும் – டத்தோஸ்ரீ மந்திரி புசார்

ஷா ஆலம், பிப் 11: டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் சிலாங்கூர் சுல்தான் ஷராவுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உத்தரவைக் கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சகத்திடம் (கேகேஎம்) கூடுதல் சுகாதார வசதிகளை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

“இன்னும் சில வாரங்களில் சைபர் ஜெயா மருத்துவமனை முழுமையாக கட்டி முடிக்கப்படும். மத்திய அரசு காப்பார், கிள்ளான் பகுதியில் 300 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையைக் கட்ட முடிவெடுத்துள்ளது.

“மேலும் சிப்பாங்கில் மற்றொரு மருத்துவமனையை கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலத்தில் இருக்கும் மருத்துவமனைகள் மீதான அழுத்தத்தைக் குறைக்க முடியும்,” என்று அவர் கூறினார்.

சுல்தான் ஷராவுடின் சிலாங்கூரில் உள்ள பொது சுகாதார வசதிகளின் அனைத்துத் தேவைகளையும் விரிவாக மறுபரிசீலனைச் செய்யுமாறு சுகாதார அமைச்சகத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது


Pengarang :