SELANGOR

எதிர்வரும் சனிக்கிழமை ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் பல நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன

ஷா ஆலம், பிப் 21: எதிர்வரும் சனிக்கிழமை கோம்பாக்கில் நடைபெறவுள்ள ஜெலஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உயிரியல் பூங்கா பிராணிகள், பறவைகள் ஷோ மற்றும் பலவகையான உணவு விற்பனை ஆகியவை  இடம்பெறவுள்ளன.

அம்பாங் ஜெயா நகராட்சி கழகம் (எம்பிஏஜே), காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பஜார் ரமடான், தாமான் மெலாவதி தளத்தில் நடைபெறவுள்ள அனைத்து இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் (ISP) நடவடிக்கைகளையும் இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது.

“வாருங்கள் கோம்பாக் மக்களே. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களில் பங்கேற்பதன் மூலம் பள்ளி விடுமுறையைச் சிறப்பாகக் கழிக்கலாம்,” என பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

RM600 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம் மக்கள் பராமரிப்பு திட்டமான இல்திசம் சிலாங்கூர் பென்யாயாங் மறுகட்டமைக்கப்பட்டு மாநில அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடையலாம்.

அத்திட்டங்கள் சிலாங்கூர் மக்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம், சிலாங்கூர் சுகாதாரத் திட்டம், சிலாங்கூர் கல்வி திட்டம், சிலாங்கூர் வீட்டுவசதி திட்டம், சிலாங்கூர் தொழில் முனைவோர் திட்டம் மற்றும் சிலாங்கூர் குழந்தை திட்டம் ஆகிய ஆறு திட்டங்கள் ஆகும்.


Pengarang :