SELANGOR

கோழி, முட்டை, அரிசி ஆகிய பொருட்கள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன – ஜெராம் மாநிலச் சட்டமன்றம்

கோலா சிலாங்கூர், பிப் 21: நேற்று ஜெராம் மாநிலச் சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனையில் கோழி, முட்டை மற்றும் அரிசி ஆகிய பொருட்கள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்தின் உதவி நிதி மேலாளர் கூறுகையில், அதிகமான மக்கள் பயனடைவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நபருக்கும் ஒரு கோழி மற்றும் ஒரு பலகை முட்டை என அவரது தரப்பு வரம்பு நிர்ணயித்துள்ளது.

இங்குள்ள ஆலம் ஜெயா இரவு சந்தை தளத்தில், காலை 10 மணிக்கு தொடங்கிய மலிவு விற்பனைக்கு ஜெராம் மாநிலச் சட்டமன்றத்தில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அடிப்படை பொருட்களை வாங்க வந்திருந்தனர் என அவர் கூறினார்.

56 டூன்களில் 693 இடங்களில் நடைபெறும் இம்மலிவு விற்பனை திட்டத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சிலாங்கூர் குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் ஜனவரி 16 முதல் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ஒன்பது இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Pengarang :