NATIONAL

தேர்தலுக்குச் சிலாங்கூர் கெஅடிலான் உறுப்பினர்களைத் தயார்படுத்தும் மாநாட்டில் 210 பேர் பங்கேற்பு

பெட்டாலிங் ஜெயா, பிப் 27- இங்குள்ள டி.எச். ஹோட்டலில் நேற்று நடைபெற்ற சிலாங்கூர் கெஅடிலான் தகவல் பிரிவை வலுப்படுத்தும் மாநாட்டில் 210 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

விரைவில் நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்குத் தயாராகும் நோக்கில் இந்த மாநாடு முதன் முறையாக நடத்தப்படுவதாகச் சிலாங்கூர் மாநிலக் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அபு பாக்கார் ஹலிமி கூறினார்.

கெஅடிலான் உறுப்பினர்கள் மத்தியில் பேச்சாற்றலை வளர்ப்பது மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான அறிவாற்றலைப் பெருக்குவது உள்ளிட்ட அம்சங்களுக்கு இந்த மாநாட்டில் முக்கியத்தும் அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றாக இந்த மாநாடு விளங்குகிறது. உறுப்பினர்கள் தொடர்பு ஆற்றலை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு எல்லா விஷயங்களிலும் எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்ற இந்த மாநாட்டை கெஅடிலான் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் ஃபஹாமி ஃபாட்டில் தொடக்கி வைத்தார்.

இதனிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு பெற்ற வெற்றியை ஹராப்பான் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்போடு இந்த தேர்தலிலும் சிலாங்கூர் மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் எனத் தாங்கள் நம்புவதாக ஹலிமி கூறினார்.


Pengarang :