NATIONAL

மைசெஜாத்ரா கொள்முதல், அனைத்துலகக் கடப்பிதழ் விவகாரங்களுக்கு மக்களையில் இன்று முன்னுரிமை

கோலாலம்பூர், பிப் 27- மைசெஜாத்ரா செயலியைக் கொள்முதல் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் மைஎஸ்ஜே சென். பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையின் சமீபத்திய நிலவரம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இன்றைய கேள்வி நேரத்தின் போது மைசெஜாத்ரா தொடர்பான கேள்வியைப் பண்டார் கூச்சிங் ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ லீ உவேன் சுகாதார அமைச்சரிடம் எழுப்புவார். அந்த செயலியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வழிவகைள் குறித்தும் அவர் விளக்கம் கோருவார்.

நாட்டிலுள்ள குடிநுழைவுத் துறையின் கடப்பிதழ் விண்ணப்ப முகப்பிடங்களில் நிலவும் கடுமையான நெரிசலைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பெக்கான் தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோஸ்ரீ ஸ் முகமது புஸி ஸ் அலி உள்துறை அமைச்சரிடம் வினா தொடுப்பார்.

வருகைக்கான முன்பதிவு இன்றி வாக் இன் எனப்படும் நேரடியாக வந்து கடப்பிதழுக்கு விண்ணப்பிக்கும் முறையை குடிநுழைவுத் துறை மீண்டும் அமல் செய்யுமா? என்ற கேள்வியையும் அவர் முன்வைப்பார். மேலும், கடுமையான நெரிசல் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிகைகள் குறித்தும் அவர் விளக்கம் கோருவார்.

கிக் எனப்படும் உணவு, பொருள் விநியோகத்தை உள்ளடக்கிய தற்காலிக அல்லது பகுதி நேர தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஷா ஆலம் ஹராப்பான் வேட்பாளர் அஸ்லி யூசுப் மனித வள அமைச்சரிடம் கேள்வியெழுப்புவார்.


Pengarang :