NATIONAL

செம்பு  கேபிள்களைத் திருடிய சம்பவத்தில் இருவர் கைது

கிள்ளான், பிப் 27: தண்ணீர் பம்ப் அறையிலிருந்து  செம்பு கேபிள்களைத் திருடியதாக நம்பப்படும் இருவர் கடந்த சனிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிப்ரவரி 22 அன்று இரவு 8.04 மணிக்கு இச்சம்பவம் நடந்த இடத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் திருட்டு தொடர்பான புகார் அளித்தார். அதனை தொடர்ந்து காவல்துறையினர்  20 வயதுடைய இரு சந்தேக நபர்களைக் கைது செய்ததாகத் தெற்கு கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைமை உதவி ஆணையர் சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.

“பிற்பகல் 3.30 மணியளவில் தொழில்நுட்ப வல்லுநரின் ரோந்து பணியின் போது தண்ணீர் பம்ப் அறையின் கதவு திறந்து கிடந்ததையும், வேலி பூட்டு வெட்டப்பட்டிருந்த தையும் கண்டார்.

“அந்த அறையில் 150 மீட்டர் மதிப்பிடப்பட்ட கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது,” என்று அவர் கூறினார்.

மதிப்பிடப்பட்ட இழப்பு சுமார் RM5,000 என்றும், சிசிடிவி காட்சிகளை மறு ஆய்வு செய்ததில், இரண்டு பேர் ஓட்டிச் சென்ற கார் தண்ணீர் பம்ப் அறை பகுதிக்குள் நுழைந்து கேபிள்களை அறுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஜாலான் அர்மடா புத்ரா, கிள்ளான் பகுதியில் உள்ள இரு உள்ளூர் நபர்கள் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

சம்பவ இடத்தில் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கேபிள்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன.

இரண்டு சந்தேக நபர்களும் மேல் விசாரணைக்காக நான்கு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், குற்றவியல் சட்டத்தின் 379 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.


Pengarang :